Skip to main content

ஓலா ஆட்டோவுக்கு எதிர்ப்பு தெரிவித்து குடும்பத்துடன் போராட்டம்!

Published on 09/01/2018 | Edited on 09/01/2018
ஓலா ஆட்டோவுக்கு எதிர்ப்பு தெரிவித்து குடும்பத்துடன் போராட்டம்!

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் 6வது நாளாக இன்றும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பணிக்கு செல்லும் மக்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் என பலரும் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகிறார்கள்.



இந்நிலையில், இந்த போக்குவரத்து வேலை நிறுத்தத்தினால் பெரும்பால மக்கள் சாதரண ஆட்டோவில் செல்வதை விட ஓலா ஆட்டோவில் செல்ல விருப்பப்படுகிறார்கள். இதனால் சாதரண ஆட்டோ தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள் என்று ஓலோ ஓட்டோவுக்கு குடும்பத்துடன் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஓலா ஆட்டோவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி மாவட்டத்தில் உள்ள இதர ஆட்டோ ஓட்டுநர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். வாடகை கார் இயக்கி வந்த ஓலா நிறுவனமானது வாடகைக்கு ஆட்டோ ஓட்டவும் தொடங்கியுள்ளது. சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் இந்த ஓலா ஆட்டோ சேவை உள்ளது. இந்த ஆட்டோ முறை வந்ததால் நீண்டகாலமாக ஆட்டோ ஓட்டி வரும் நபர்களது அடிப்படை வாழ்க்கையே பாதிக்கப்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.



திருச்சி மாவட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் பாதுகாப்பு சங்கத்தலைவர் கோபிநாத் தலைமையில், 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களது குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம் நடத்த கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக வந்தனர். போலீசார் அவர்களை நுழைவு வாயிலுக்கு முன்பாகவே தடுத்து நிறுத்தினர். தங்களது வாழக்கையை பாதுகாக்க கோரி கலெக்டரிடம் மனு அளிக்க வந்திருப்பதாக கூறினர். ஆனால், அனைவரையும் உள்ளே அனுமதிக்க முடியாது என போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இதனைக் கண்டித்தும், ஓலா ஆட்டோ முறையை திருச்சி மாவட்டத்தில் அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், போலீசார் அவர்களை ஆட்சியர் அலுவலகத்துக்குள் அனுமதித்தனர். அவர்களிடம், மாவட்ட வருவாய் அலுவலர் பஷீர் குறைகளை கேட்டறிந்தார். பின்னர், அவரிடம் ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களது மனுவை அளித்தனர்.

- ஜெ.டி.ஆர்

சார்ந்த செய்திகள்