Skip to main content

மின்வெட்டுக்கு வாய்ப்பில்லை- அமைச்சர் தங்கமணி

Published on 16/09/2018 | Edited on 16/09/2018

 

thangamani

 

செய்தியாளர்களை சந்தித்த தமிழக மின்சாரதுறை அமைச்சர்  தங்கமணி கூறுகையில்,

 

மின்சாரதுறை விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேட எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை சொல்லிவருகிறார்கள். அவர்கள் விரைவில் ஏமார்ந்துதான் போகப்போகிறார்கள். தமிழகத்தில் மின் வெட்டுக்கு நிச்சயமாக வாய்ப்பில்லை அதேபோல் மின்துறை தனியாருக்கு மயமாக்கபடவிருக்கிறது என்று நல்லகண்னு கூறிய புகார் முற்றிலும் தவறானது. தூத்துக்குடி அனல்மின் நிலையத்திற்கு 6 நாட்களுக்கு தேவையான நிலக்கரியும், மேட்டூர், வடசென்னையில் 3 நாட்களுக்கு தேவையான நிலக்கரியும் கையிருப்பு உள்ளது. மேலும் 12 வேகன்கள் நிலக்கரி வந்து கொண்டிருக்கிறது. 15 நாட்களுக்கான நிலக்கரி கையிருப்பு உள்ளது என்ற நிலையை விரைவில் அடைவோம் என்றும் கூறியுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்