Skip to main content

'நிவர்' புயல் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம்... தமிழக அரசு அறிவிப்பு!

Published on 21/01/2021 | Edited on 21/01/2021

 

nivar cyclone farmers fund tn govt

 

நிவர் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் தர ரூபாய் 26.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு.

 

அதன்படி, மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 16.08 கோடியும், தோட்டக் கலைத்துறை சார்பில் ரூபாய் 10.51 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மானாவாரி நெற்பயிர் தவிர அனைத்து மானாவாரி பயிர்களுக்கும் இடுபொருள் நிவாரணம் ரூபாய் 10,000 வழங்கப்படும். நீர்ப்பாசன வசதிபெற்ற இதர பயிர்களுக்கு (ஒரு ஹெக்டேருக்கு) இடுபொருள் நிவாரணமாக ரூ.20,000, பல்லாண்டு காலப் பயிர்களுக்கு இடுபொருள் நிவாரணத் தொகையாக (ஒரு ஹெக்டேருக்கு) ரூ.25,000 வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்