Published on 10/12/2018 | Edited on 10/12/2018

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக ஆடியோ வெளியானதன் அடிப்படையில் கைது செய்யப்பட்ட அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி வழக்கை சிபிசிஐடி விசாரணையிலிருந்து சிபிஐக்கு மாற்ற வேண்டும் என மாதர் சங்க பொதுச்செயலாளர் சுகந்தி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடுத்ததிருந்தார்.
இன்று நடந்த அந்த விசாரணையில் ஏற்கனவே சிபிஐக்கு மாற்றக்கோரி தொடுக்கப்பட்ட மேல்முறையீடை தள்ளுபடி செய்ததுபோல் மாதர் சங்க பொதுச்செயலாளர் சுகந்தி தொடர்ந்த இந்த வழக்கையும் தள்ளுபடி செய்யுமாறு அரசு தரப்பு வாதிட்டது. ஆனால் மனுதாரர்கள் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டுள்ளதால் இந்த வழக்கின் மீதான விசாரணையை ஜனவரி 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.