நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையை 100% மையப்படுத்த பொது மருத்துவக் கலந்தாய்வை நடத்த தேசிய மருத்துவக் கழகம் (என்.எம்.சி) முன்வந்துள்ளது. இதற்குத் தமிழக அரசு எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகிறது. பல்வேறு அரசியல் கட்சிகளும் இதில் உள்ள பாதகங்களைத் தெரிவித்து அதனைக் கைவிடும்படி வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தேசிய மருத்துவத் தொகுதி தேர்வான National Exit Test (NEXT தேர்வை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் ஏற்கனவே மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வு மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நெக்ஸ்ட் தேர்வு அறிமுகப்படுத்துவது கிராமப்புற மற்றும் பின்தங்கிய மாணவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும். எனவே நெக்ஸ்ட் தேர்வு நடத்தும் முடிவை கைவிட்டு, தற்போதுள்ள முறையே தொடர வேண்டும்' என முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.