டிடிவி தினகரன் இல்லை என்றால் அதிமுக எம்எல்ஏக்கள் அணி மாறி இருப்பார்கள்; ஆர். சாமி
டிடிவி தினகரன் இல்லை என்றால் அதிமுக எம்எல்ஏக்கள் அணி மாறி இருப்பார்கள் என தினகரனின் ஆதரவாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆர். சாமி தெரிவித்துள்ளார்.
முன்னாள் எம்எல்ஏவும், டிடிவி தினகரனின் ஆதரவாளரும் ஆன ஆர்.சாமியை, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.சாமி, கட்சி இணைப்பு குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறினார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மனசாட்சியுடன் நடந்துகொள்ள வேண்டும். பதவி வேண்டும் என கேட்டுக்கொண்ட காரணத்தால் மட்டுமே எம்எல்ஏ ஏ.கே.போசுக்கு கட்சியில் பொறுப்பு வழங்கப்பட்டது. டிடிவி தினகரன் இல்லை என்றால் அதிமுக எம்எல்ஏக்கள் அணி மாறி இருப்பார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.