தினகரன் ஆதரவு எம்எல்ஏவுக்கு முன்ஜாமீன்
நாமக்கல் ஒப்பந்தக்காரர் சுப்பிரமணியன் தற்கொலை வழக்கில் முன்னாள் அமைச்சர் பழனியப்பனுக்கு முன்ஜாமீன் அளித்து உத்தரவிட்டது சென்னை ஐகோர்ட்.
தினகரன் ஆதரவாளரான இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசார் தேடினர். தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கியிருந்த கர்நாடக மாநிலம் குடகுவிலும் அவரை தேடி சென்றனர். அங்கிருந்து அவர் தலைமறைவானார். பின்னர் அவர் சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட் அவருக்கு முன்ஜாமீன் வழங்கியது.