பொங்கல் பண்டிகை காரணமாக, திருச்சி மாநகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தற்காலிகப் பேருந்து நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மார்க்கத்தில் இருந்து வந்துசெல்லும் பேருந்துகளுக்கு கண்டோன்மெண்ட் சோனா-மீனா தியேட்டர் முன்பும், புதுக்கோட்டை மற்றும் மதுரை மார்க்கத்தில் இருந்து வந்துசெல்லும் பேருந்துகளுக்கு மன்னார்புரம் ரவுண்டானா பகுதியிலும் தற்காலிகப் பேருந்து நிலையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை மார்க்கத்தில் இருந்து திருச்சியைக் கடந்து செல்லும் பேருந்துகளுக்கு மன்னார்புரத்தில் நிறுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. மற்ற ஊர் பேருந்துகள் வழக்கம்போல், திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் செல்லும். திருச்சியில் இருந்து சென்னைக்கு தினசரி 150 பேருந்துகளும் கோயம்புத்தூர், திருப்பூர், சேலம் ஆகிய பகுதிகளுக்கு 75 பேருந்துகளும், இதர மாவட்டங்களுக்கு தேவைக்கேற்பவும் என மொத்தம் 300 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இந்த தற்காலிகப் பேருந்து நிலையங்கள் 12ஆம் தேதி முதல் 19ஆம் தேதி தேதி வரை செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.