



தமிழ் சினிமாவில் எழுத்தாளர், இயக்குநர், நடிகர் என பன்முக திறமைகளைக் கொண்ட ஆர்.என்.ஆர். மனோகர் இன்று (17.11.2021) மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இவர் அஜித் நடிப்பில் வெளியான ‘என்னை அறிந்தால்’, ‘வேதாளம்’, ‘விஸ்வாசம்’, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘நானும் ரவுடிதான்’, ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘மிருதன்’ உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.
மேலும், ‘மாசிலாமணி’, ‘வேலூர் மாவட்டம்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். ஆர்.என்.ஆர். மனோகர் சென்னையில் உள்ள தன் வீட்டில் மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது மறைவு தமிழ் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இவரது இறப்புக்கு இரங்கல் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், நக்கீரன் ஆசிரியர் மறைந்த ஆர்.என்.ஆர். மனோகர் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.