Skip to main content

சஸ்பெண்டை எதிர்த்து நகராட்சி ஆணையர் மனு! - தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு..!

Published on 02/04/2021 | Edited on 02/04/2021
Municipal Commissioner's petition against suspension, Election Commission ordered to respond

 

கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சி ஆணையர் முத்துக்குமாரை, தேர்தல் பணிகளில் சரிவர ஈடுபடவில்லை எனப் பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து, முத்துக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

 

அப்போது சஸ்பெண்ட் செய்ய நகராட்சி நிர்வாக ஆணையருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும், மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரமில்லை எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. மனுதாரர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால், அவருக்கு உயரதிகாரியான, மாவட்டத் தேர்தல் அதிகாரி (மாவட்ட ஆட்சியர்) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகவும், அதில் எந்தச் சட்டவிரோதமும் இல்லை எனவும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு தொடர்பாக விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஏப்ரல் 8ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்