தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல், வேட்புமனுத் தாக்கல் என அனைத்தையும் முடித்து தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
திமுக தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரி சோதனை நடந்து முடிந்திருக்கும் நிலையில், சீர்காழியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக தலைவர் ஸ்டாலின், அதிக சோதனை நடத்தினால் அதிக வாக்குகள் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். ''எதற்கும் அஞ்சமாட்டோம். அதிக சோதனை நடத்தினால் அதிக வாக்குகள் கிடைக்கும். திமுக ஆட்சிக்கு வந்துவிடும் எனப் பயந்து நம்மை மிரட்ட வருமான வரி சோதனையை நடத்துகிறார்கள். தேர்தல் வந்தால் மட்டும் பிரதமர் மோடியும், அமித்ஷாவும் தமிழகம் வருவார்கள். விவசாயக் கடன் தள்ளுபடியை நாம் அறிவித்ததும் தேர்தலுக்காக ஈபிஎஸ் அறிவிக்கிறார்'' என்றார்.