Skip to main content

கந்தூரி விழாவில் 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்களுக்கு பிரியாணி!

Published on 19/01/2020 | Edited on 19/01/2020

திண்டுக்கல் மாநகரில் உள்ள நாகல்நகர் பள்ளிவாசல் மற்றும் ஜங்ஷன் ஜிம்மா பள்ளிவாசல் சார்பாக வருடந்தோறும் கந்தூரி விழா நடத்துவது வழக்கம்.

அது இந்த ஆண்டும் நாகல்நகர் பள்ளிவாசல் வளாகத்தில் கந்தூரி விழா நடைபெற்றது. இந்த விழாவில் காலை முதல் மதியம் ஒரு மணிவரை ஏறத்தாழ 15,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் அனைவருக்கும்  அசைவ விருந்து  பிரியாணி அளிக்கப்பட்டது.

 

More than 15 thousand people at Gandhuri Festival

 

இந்த விருந்தில் நாகல்நகர் பாரதிபுரம், ரவுண்ட் ரோடு புதூர், ரயில்வே ஜங்ஷன் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து அனைத்து மதத்தினரும் கலந்துகொண்டு பிரியாணி பெற்று சென்றனர்.

இதுகுறித்து பள்ளிவாசல் தரப்பில் கூறும்போது,

 

More than 15 thousand people at Gandhuri Festival



இந்த கந்தூரி விழா எம்மதமும் சம்மதம் என்ற அடிப்படையில் சமத்துவ விழாவாக அனைத்து மதத்தினரும் கலந்து கொள்ளும் வகையில் சமய ஒற்றுமையை வலியுறுத்தி நடத்தப்பட்டு வருகிறது என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்