இந்தியாவில் கரோனா இரண்டாம் அலை பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு மாநிலங்கள் முழு ஊரடங்கை அறிவித்துள்ளன. சில மாநிலங்கள் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு, வார இறுதி ஊரடங்கு என பல்வேறு முறைகளில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
அந்தவகையில் கர்நாடகாவிலும் முழுநேர ஊரடங்கு 14 நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் கரோனா உறுதி செய்யப்பட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காணாமல்போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் காணாமல் போன கரோனா பாதிக்கப்பட்டவர்கள் தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்திற்குள் வராமல் இருக்க எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடகாவில் கரோனா உறுதி செய்யப்பட்ட 3000 பேரில் பலரது செல்ஃபோன்கள் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாகவும், சிலர் வீட்டை காலி செய்துவிட்டு காணாமல் போய்விட்டதாகவும் கர்நாடக அரசு தெரிவித்திருக்கும் நிலையில், நீலகிரி எல்லையில் தொடர்கிறது தீவிர சோதனை.