Skip to main content

தமிழகத்தில் எங்கும் மின்வெட்டு இல்லை -தங்கமணி

Published on 08/11/2018 | Edited on 08/11/2018
thangamani

 

அமைச்சர் தங்கமணி இன்று டெல்லியில் மத்திய அமைச்சர்களை சந்தித்தார். அமைச்சர்களை சந்தித்தபின் பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர், தமிழகத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக மத்திய அமைச்சர்கள் தெரிவித்தனர், தமிழகத்தில் எங்கும் மின்வெட்டு இல்லை, தமிழகத்திற்கு நாள் ஒன்றுக்கு தோராயமாக 72,000 டன் தேவைப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஓ.பி.எஸ்-ஐ தனியாக சந்தித்த வேலுமணி தங்கமணி - ரகசியத்தை உடைத்த ஜெ.சி.டி. பிரபாகரன்

Published on 04/10/2022 | Edited on 04/10/2022

 

Velumani Thangamani who met OPS alone - JCT  Prabhakaran

 

அதிமுகவில் ஒற்றைத்தலைமை வேண்டும் என்பதற்காக ஜூலை 11ல் நடந்த பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமியை கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுத்தனர். எனினும் கட்சியின் பிரச்சனை இன்னும் முடிவுக்கு வராமல் தான் இருக்கிறது. 

 

இந்நிலையில், எடப்பாடி ஆதரவாளரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான தங்கமணி அதிமுக கட்சி கூட்டத்தில் பேசிய ஒரு வீடியோ பெரும் வைரலானது. அதில் அவர், “கட்சி நன்றாக இருக்கும் போதே ஓ.பி.எஸ் தர்மயுத்தம் நடத்தினார். இருந்தும் கட்சி உடையக்கூடாது என எடப்பாடி பழனிசாமி அவருக்குத் துணை முதல்வர் பதவி கொடுத்தார். கட்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் பிரச்சனை வந்தது” என ஓ.பி.எஸ். மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். 

 

    “ஓபிஎஸ் மகள் வீட்டில் நடந்த சமாதான பேச்சு வார்த்தை பிரச்சனையில் முடிந்தது” - முன்னாள் அமைச்சர் தங்கமணி

 

இந்நிலையில், ஓ.பி.எஸ். ஆதரவாளரான ஜெ.சி.டி. பிரபாகரன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “தங்கமணி பேச்சுக்கு உடனடியாக பதில் சொல்ல வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது. காரணம் இந்தக் கட்சியில் அவர்கள் சார்பில் பொய் சொல்வதற்கு ஜெயக்குமாரைமட்டும் தான் வைத்திருந்தார்கள் என நினைத்திருந்தேன். ஆனால், தற்போது அதில் தங்கமணியையும் களத்தில் இறக்கியிருக்கிறார்கள் என்பது அவரது பேச்சிலிருந்து தெரிகிறது. தர்மயுத்தம் துவங்கிய காலத்தில் ஓ.பி.எஸ். பின் மக்களும், தொண்டர்களும் திரண்டு நின்றதை நாடே பார்த்தது.  

 

அப்போது ஓ.பி.எஸ். ஒரு நாள் எங்களை அழைத்து, ‘நிலைமை இப்படியே போய்க்கொண்டிருந்தால் கட்சியும், ஆட்சியும் வீனாகிவிடும். என்னால் இந்தக் கட்சி கெட்டது, பிளவுபட்டது, என்னால் எல்லாம் முடிந்தது எனும் நிலைமை என்றும் வரக்கூடாது. நான் ஜெயலலிதாவிடம் பயிற்சி பெற்றவன் அதனால், கட்சியில் ஒற்றுமையை விரும்புகிறேன். அதனால், தர்மயுத்தத்தில் நாம் வைத்திருக்கும் கோரிக்கையை அவர்கள் ஏற்றுக்கொண்டால் இணைவோமா’ என்று எங்களிடம் கேட்டுவிட்டு அந்த தர்ம யுத்தத்தை ஒரு முடிவுக்கு கொண்டுவந்தார். 

 

இந்த தர்மயுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர, பல்வேறு நிலையில் பலர் முயற்சி எடுத்தனர். ஆனால், அதிகாரப்பூர்வமாக ஓ.பி.எஸ். சார்பில் நானும், எடப்பாடி சார்பில் வைத்திலிங்கமும் தான் முதற்கட்ட பேச்சுவார்த்தைகளை துவங்கினோம். அதன் பிறகு தங்கமணி, வேலுமணி ஆகியோர் வந்தனர். அப்போது ஓ.பி.எஸ். தரப்பிலிருந்து நான், மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினோம். அதன்பிறகு பி.எச். பாண்டியன், மனோஜ் பாண்டியன், மைத்ரியேன், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட மற்றவர்கள் அந்தக் குழுவில் இணைந்து பேச்சு வார்த்தை நடந்தது. 

 

இந்த சமயத்தில் தங்கமணி மற்றும் வேலுமணி ஆகியோர் ஓ.பி.எஸை தனியாக சந்தித்து, அவர் கரங்களை பிடித்துகொண்டு என்னென்ன சொன்னார்கள் என்பது அவர்கள் மனசாட்சிக்கு நன்றாக தெரியும். அதில், ‘மீதியிருக்கும் காலத்தில் அவர் (இ.பி.எஸ்.) முதலமைச்சராக இருந்துவிடட்டும். அடுத்த முறை நீங்கள் (ஓ.பி.எஸ்) தான் முதலமைச்சர் எனும் உத்தரவாதத்தை தருகிறோம்’ என தங்கமணி சொன்னார். 

 

இதுமட்டுமல்ல, ‘இவ்வளவு பெருந்தன்மையாக நீங்க விட்டு கொடுக்கிறீர்கள். நாங்கள் சொன்னதை எல்லாம் ஏற்றுக்கொள்கிறீர்கள். உங்களின் நிபந்தனைகளை எல்லாம் நாங்கள் ஏற்றுக்கொண்டு, உடனடியாக நீங்கள் இணைய வேண்டும் என்பதில் ஆர்வாம் காட்டுகிறோம்’ என்று சொன்னபோது,  கொடுக்கப்பட்ட உறுதிமொழிகளில் ஒன்றைக்கூட அவர் நிறைவேற்றவில்லை” என்று தெரிவித்தார்.  

 

 

Next Story

இனிமேதான் கிடுக்கிப்பிடி விசாரணை இருக்கு!! தங்கமணி வீடுகளில் ரெய்டு குறித்து ர.ர.க்கள் மத்தியில் பேச்சு! 

Published on 16/12/2021 | Edited on 16/12/2021

 

Anti Corruption raid in Thangamani house and his son house
தரணிதரன் வீடு

 

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணியின் மகன் தரணிதரன். இவருக்குச் சொந்தமாக சேலம் நெடுஞ்சாலை நகரில் சொகுசு பங்களா உள்ளது. இவருடைய வீட்டுக்கு பக்கத்து தெருவில்தான் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வீடும் இருக்கிறது. தரணிதரன் வீட்டில் சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. கிருஷ்ணராஜன் தலைமையிலான போலீசார், புதன்கிழமை (டிச. 15) சோதனை நடத்தினர். 

 

காலை 6.30 மணியளவில் தொடங்கிய சோதனை, மாலை 6 மணிக்கு முடிந்தது. அவருடைய வீட்டில் இருந்து போலீசார் ஒரு சிறிய கைப்பையை மட்டும் எடுத்துச் சென்றனர். அதில் சில ஆவணங்களும், ஒரு செல்போனும், ஒரு சிறிய டைரியும் எடுத்துச் சென்றதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. தரணிதரன் வீட்டில் சோதனை நடந்த அதே நேரத்தில், சேலம் ரயில்வே ஜங்ஷன் அருகில் உள்ள அஷ்வா பார்க் நட்சத்திர விடுதியிலும் சோதனை நடந்தது. குழந்தைவேலு என்பவருக்குச் சொந்தமான இந்த விடுதியில், நாகை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். 

 

மேலும், சேலம் நரசோதிப்பட்டியில் உள்ள குழந்தைவேலுவின் வீடு, மறவனேரியில் உள்ள தரணிதரனின் ஆடிட்டர் அலுவலகம் ஆகிய இடங்களிலும் சோதனை நடந்தது. இந்தச் சோதனையில் பெரிய அளவில் பணமோ, நகைகளோ சிக்கவில்லை.

 

லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை குறித்து அதிமுக புள்ளிகள் சிலரிடம் பேசினோம். ''சேலம், நாமக்கல், ஈரோடு வழித்தடத்தில் ஓடும் தனியார் பஸ்களில் 40 சதவீதம் தங்கமணியின் பினாமியின் பெயர்களில்தான் இயங்குகின்றன. உதாரணமாக திருச்செங்கோட்டைச் சேர்ந்த முருக கடவுள், கிருஷ்ணர் கடவுள் பெயரிலான டிரான்ஸ்போர்ட் நிறுவனத்துக்குச் சொந்தமான அனைத்து பஸ்களையும் தங்கமணிதான் பினாமிகள் மூலம் வாங்கியிருப்பதாக அதிமுக கட்சிக்குள்ளேயே பலமான பேச்சு உண்டு. 

 

th

 

இதில் கிருஷ்ணர் கடவுள் பெயரிலான நிறுவனத்திடம் இருந்து 7 பஸ்களை தலா 7 கோடி ரூபாய்க்கு வழித்தட உரிமையுடன் தங்கமணி தரப்பில் வாங்கியுள்ளனர். முருக கடவுள் பெயரிலான டிரான்ஸ்போர்ட் நிறுவனத்திடம் இருந்து 4 பஸ்களை, வழித்தட உரிமையுடன் 6 கோடி ரூபாய் மதிப்பிலான பஸ்களை தலா 8 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளனர். இவ்விரு நிறுவன உரிமையாளர்களுக்கும் நிறைய அழுத்தம் கொடுத்தே வாங்கியுள்ளனர். ஆனால், சந்தேகத்திற்குரிய பஸ் டிரான்ஸ்போர்ட் நிறுவனங்களில் ஒரு இடத்தில் கூட போலீசார் சோதனை நடத்தாதது வியப்பாக இருக்கிறது.

 

கடந்த ஆட்சிக்காலத்தில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த பல முன்னாள் அமைச்சர்கள், பிரதான இடத்தில் உள்ள சொத்துகளை குறி வைத்துவிட்டால் அவற்றை என்ன விலை கொடுத்தாவது வாங்கி விடுவார்கள். அவ்வாறு எக்கச்சக்கமான சொத்துகளை சந்தை விலையைக் காட்டிலும் கூடுதல் விலையைக் கொடுத்து, பினாமி பெயர்களில் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

 

எதிர்காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைகள் வரலாம் என்பதால், யாரிடம் இருந்து சொத்துகளை வாங்குகிறார்களோ அந்த சொத்துகளை அதே உரிமையாளர்களின் பெயர்களிலேயே தொடரச் செய்து வருகின்றனர். அதனால்தான் இப்போது நடந்த சோதனைகளின்போது கூட பெரிய அளவில் பணமோ, நகைகளோ, ஆவணங்களோ சிக்கவில்லை” என்கிறார்கள் அதிமுக புள்ளிகள். 

 

இது தொடர்பாக சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தரப்பில் கேட்டபோது, ''வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எப்.ஐ.ஆர். பதிவு செய்வதும், அதன்பேரில் புகாருக்கு ஆளானவர்களுக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்துவதும் சட்டப்பூர்வமான சம்பிரதாய நடவடிக்கைகள்தான். இதன் பிறகு, முன்னாள் அமைச்சர் தங்கமணி, அவருடைய பினாமிகளாக சந்தேகப்பட்டியலில் உள்ள அனைவருக்கும் சம்மன் அனுப்பி, விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்து விடுவோம்.

 

விசாரணையின்போது அவர்கள் அளிக்கும் வாக்குமூலங்களின் அடிப்படையில் மேலும் பல புதிய இடங்களில் சோதனைகள் தொடரலாம். புதிதாக சிலர் மீது வழக்குகளும் பாயக்கூடும். இப்போது நடந்த சோதனையை வைத்து எதையும் இறுதி செய்துவிட முடியாது. இதெல்லாமே ஆரம்பம்தான். இனிமேல்தான் கிடுக்கிப்பிடி விசாரணையே இருக்கிறது. 

 

கடந்த 2017க்குப் பிறகு பத்திரப்பதிவுத்துறையில் நடந்த அதிக மதிப்பிலான கிரைய ஒப்பந்தங்கள் தொடர்பான விவரங்களையும் சேகரித்து வைத்துள்ளோம். அதன் மீதும் விசாரணை நடந்து வருகிறது. தங்கமணியின் பினாமிகள் ஆந்திராவில் நிறைய இடங்களில் முதலீடு செய்துள்ளனர். அந்த மாநிலத்தில் மேலும் சில இடங்களில் சோதனை நடத்தப்படும்” என்றனர்.