Skip to main content

அமைச்சர் மாவட்டத்தில் டெங்கு காய்சலுக்கு சிறுவன் பலி

Published on 13/08/2017 | Edited on 13/08/2017
அமைச்சர் மாவட்டத்தில் டெங்கு காய்சலுக்கு சிறுவன் பலி

புதுக்கோட்டை மாவட்டம் அணவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர் அவரது மனைவி ஜெயந்தி. ராமர் கரூரில் டைலராக வேலை செய்கிறார். குழந்தைகளின் படிப்புக்காக கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் கிராமத்தில் ஜெயந்தி மட்டும் குழந்தைகளுடன் வசிக்கிறார். ராமர் கரூரில் தங்கி வேலை செய்கிறார். இவர்களின் மகன் சித்தார்த்(4) கடந்த ஜூலை 20 ந் தேதி முதல் காய்ச்சல் ஏற்பட்டு கொத்தமங்கலம் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்தில் இன்று காலை வரை சிகிச்சை பெற்றுள்ளார். 

இந்த நிலையில் இன்று சித்தார்த் மிகவும் சோர்வுற்றதால் மாலை ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கு அந்த சிறுவனுக்கு டெங்கு காய்சல் என்றும் உடனே புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் புதுக்கோட்டை செல்லும் வழியிலேயே சித்தார்த் பரிதாபமாக உயிரழந்தார்.

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மாவட்டத்திலேயே சிறுவன் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனுக்கு தொடக்கத்தில் இருந்தே சிகிச்சை அளித்த கொத்தமங்கலம் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உறவினர்கள் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
    
-இரா.பகத்சிங்

சார்ந்த செய்திகள்