Skip to main content

அகற்றப்படும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பேனர்கள்

Published on 02/12/2017 | Edited on 02/12/2017
அகற்றப்படும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பேனர்கள்

கோவையில் வருகின்ற 3ஆம் தேதி எம்ஜிஆர் நுற்றாண்டு விழாவை முன்னிட்டு வைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவுகள் மற்றும் பேனர்களை அகற்ற உயர் நீதிமன்றம் நேற்று உத்திரவிட்டது. சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் கடந்த 24 ஆம் தேதி இரவு அலங்கார வளைவில் மோதி இறந்த ரகு லாரி ஏறி பலியானதை  தொடர்ந்து மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர் மற்றும் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தும் எந்த வித நடவடிக்கையும் இல்லாததால், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று போராட்டம் நடத்தினர். 

இதனையடுத்து கார்த்திக் தொடுத்த வழக்கின் அடிப்படையில் உயர் நீதிமன்றம் வழங்கிய ஆணையை அடுத்து  மாநகரட்சியின் கிழக்கு மண்டலத்தில்  போக்குவரத்துக்கு இடையூராக வைக்கப்பட்டிருந்த 10 பேனர்கள் மற்றும் அலங்கார வளைவுகளை அகற்றும் பணியில் மாநகராட்சி திட்டக்குழும அதிகாரிகள் தலைமையில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் மட்டும் 10 இடங்களில் பொதுமக்களுக்கு இடையூராக வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றப்பட்டன. மேலும் வடக்கு மண்டலத்தில் 12 பேனர்களும், மத்திய மண்டலத்தில் 10 பேனர்களும், மேற்கு மண்டலத்தில் 4 பேனர்களும்  இதுவரை அகற்றப்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சி திட்டக்குழும  அதிகாரிகள் தலைமையிலான குழு இடையூராக இருக்கும் வளைவுகள் மற்றும் பேனர்களை அகற்றி வருகின்றனர். மேலும் அகற்றப்படும் பேனர்கள் புதிய இடங்களில் அனுமதி வாங்காமல் வைக்கப்பட்டு வருகிறது.

அருள்

சார்ந்த செய்திகள்