Skip to main content

போக்குவரத்து ஊழியர்களுக்கு ஆதரவாக மறியல் செய்த மார்க்சிஸ்ட் தொழிற்சங்கத்தினர் கைது!

Published on 09/01/2018 | Edited on 09/01/2018
போக்குவரத்து ஊழியர்களுக்கு ஆதரவாக மறியல் செய்த மார்க்சிஸ்ட் தொழிற்சங்கத்தினர் கைது!

அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை அரசு நடத்திய பேச்சுவார்த்தை  தோல்வியடைந்ததையடுத்து மாநிலம் முழுவதும் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினார்கள்.

போராட்டத்தால் போக்குவரத்து முடங்கி பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பேருந்துகளை இயக்க தற்காலிக ஓட்டுநர்களைக் கொண்டு இயக்கப்பட்டாலும் புதிய ஒட்டுநர்களால் ஆங்காங்கே விபத்துகள் ஏற்படுவதை பார்த்து பயணிகளும் பயணங்களை தவிர்த்து வருகின்றனர்.

இந்தநிலையில் போக்குவரத்து ஊழியர்களுக்கு ஆதரவாக பல்வேறு தொழிற்சங்கங்களும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

அதே போல புதுக்கோட்டையில் மார்க்சிஸ்ட் தொழிற்சங்கம் சார்பில் 8ந் தேதி காலை திலகர் திடலில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் சட்ட ஒழுங்கு பிரச்சனை வரும், பள்ளி மாணவர்களுக்கு, போக்குவரத்து பாதிக்கப்படும் என்று பல காரணங்களை காட்டி அனுமதி மறுக்கப்பட்டது.



அமைதியாக நடக்க இருந்த ஆர்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் சாலை மறியல் போராட்டத்தை அறிவித்தனர்.

அதன்படி இன்று மதியம் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து மாற்றி விடப்பட்டது. தொடர்ந்து மறியலில் ஈடுபட்டிருந்தவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து தூக்கி வேனில் ஏற்றிச் சென்று ஒரு திருமண மண்டபத்தில் அடைத்துள்ளனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கொடுத்திருந்தால் அமைதியாக நடந்திருக்கும் ஆனால் அமைதி போராட்டத்தை மறியலாக மாற்றி போக்குவரத்தை தடை செய்ய செய்தது காவல்துறை தான் என்றனர்.

- இரா.பகத்சிங்

சார்ந்த செய்திகள்