Skip to main content

'கோடநாடு வழக்கில் மூடி மறைக்கப்பட்ட பல உண்மைகள்'-ஐகோர்ட்டில் காவல்துறை தகவல்!

Published on 02/09/2022 | Edited on 02/09/2022
 'Many accidents covered up in the Koda Nadu case'- Police information in the court!

 

நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான பங்களாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை, கொள்ளை வழக்கில் விசாரணையானது தீவிரமாக நடைபெற்று வருகிறது. கோடநாடு கொலை வழக்கில் ஏற்கனவே தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில் இதில் மேலும் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதனால் இந்த வழக்கில் மொத்தம் ஐந்து தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணையானது நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சசிகலா, அவரது உறவினர் விவேக், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடைபெற்றது.

 

இந்த வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும் என வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மனோஜ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கில் ஆஜரான அரசு வழக்கறிஞர் முகமது ஜின்னா, இந்த வழக்கில் மறைக்கப்பட்ட பல உண்மைகள், விபத்துகள் போலீசாரின் விசாரணையில் வெளிவந்திருப்பதாகவும், எனவே வழக்கின் விசாரணையை கால நிர்ணயம் செய்யக்கூடாது எனவும் வாதிட்டார். இதன்பின் கொடநாடு வழக்கில் காவல்துறையின் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி வழக்கை வரும் 16 தேதிக்கு தள்ளிவைத்தார்.

 

 

சார்ந்த செய்திகள்