Skip to main content

''ஆளுநர்கள் மக்களைச் சந்திப்பதால் பல பிரச்சனைகள் தீர்ந்திருக்கிறது'' - தமிழிசை கருத்து

Published on 28/11/2022 | Edited on 28/11/2022

 

N

 

ஆளுநர்கள் மக்களைச் சந்திப்பதால் பல பிரச்சனைகள் தீர்ந்திருக்கிறது என ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

 

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''என்னிடம் கூட சில பில்ஸ் நிலுவையில் இருக்கிறது. அவற்றைத் தாமதப்படுத்த வேண்டும் என்று தாமதப்படுத்தவில்லை அது தொடர்பாக சில விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த நடைமுறையில் இருந்து முற்றிலுமாக வேறு நடைமுறையை அவர்கள் கொண்டு வருகிறபொழுது இது மக்களுக்குப் பலன் தருகிறதா என்று பார்த்துவிட்டு கையெழுத்துப் போடலாம் என நினைப்பது தவறில்லை.

 

ஒரு ஆளுநருக்கு கையெழுத்திட உரிமை இருப்பதைப் போலவே நாம் சரியான நிலையில் கையெழுத்துப் போடுகிறோமா, மக்களுக்குப் பலன் தருகின்ற ஒரு சட்டத்தில் கையெழுத்துப் போடுகிறோமா என்பதையும் உறுதி செய்ய ஆளுநருக்கு உரிமை இருக்கிறது. இதைத் தாமதம் என்று எடுத்துக் கொள்வதை விட அதற்கான கால அவகாசம் எடுத்துக்கொள்ளலாம். ஏதோ ஒரு அரசியல் காரணத்திற்காக ஆளுநர் உரை எனக்கு மறுக்கப்பட்ட பொழுது கூட அடுத்த நாள் பட்ஜெட் தாக்கல் செய்வதில் எந்தவித தாமதமும் ஏற்பட்டு விடக்கூடாது, மக்களுக்கு அது பயன்படாமல் இருந்து விடக்கூடாது என்பதற்காக உடனே நான் கையெழுத்திட்டேன்.

 

எனவே மக்களைச் சார்ந்துதான் என்னைப் போன்றவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அது புரியாமல் இங்கே சில பேர் விமர்சனம் செய்கிறார்கள் என்பதுதான் எனது கருத்து. மக்களை ஆளுநர்கள் சந்திக்கலாம். புதுச்சேரியில் கூட மக்களைச் சந்திப்பதை அன்பிற்குரிய அண்ணன் நாராயணசாமி விமர்சிக்கிறார். ஆனால் ஆளுநர்கள் மக்களைச் சந்திப்பதால் பல பிரச்சனைகள் தீர்ந்திருக்கிறது. பஞ்சாயத்தில் பணியாற்றினாலும் சரி, ஆளுநர் மாளிகையில் பணியாற்றினாலும் சரி மக்களுக்கானப் பணியாக இருக்க வேண்டும் என்பதில் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை இருக்கிறது.'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்