விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ளது ஈ.மண்டகப்பட்டு. இந்த கிராமத்தை சேர்ந்தவர் கீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வயது 29. அதே ஊரைச் சேர்ந்த பழனி என்பவரின் மகன் சக்திவேல் வயது 29. இவர்கள் இருவரும் கடந்த 10 ஆண்டுகளாக காதலித்துவந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 7ஆம் தேதி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். திருமணம் முடிந்த மறுநாள் காலை வீட்டில் இருந்து சென்ற சக்திவேல் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை.
தனது காதல் கணவர் திருமணம் முடிந்த மறுநாள் முதலே காணாமல்போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கீதா பல்வேறு இடங்களில் தேடி பார்த்துவிட்டு போலீசில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில், என்னை காதல் திருமணம் செய்து என் கணவர் என்னை விட்டுவிட்டு ஈ.மண்டகப்பட்டு கிராமத்தை சேர்ந்த விமலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 21 என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.
முதல் மனைவி நான் உயிரோடு இருக்கும்போதே என்னை ஏமாற்றிவிட்டு இரண்டாவது திருமணம் செய்துகொண்ட என் கணவர் சக்திவேல் மீது வழக்கு வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியுள்ளார்.
அவரது புகாரின்பேரில் செஞ்சி அனைத்து மகளிர் போலீசார், அவரது காதல் கணவர் சக்திவேல், விமலா, சக்திவேலின் தந்தை பழனிசாமி மற்றும் ஜெயக்குமார் ஆகிய நால்வரையும் கைது செய்துள்ளனர். குமார் என்பவரை தேடி வருகின்றனர். காதலித்து கரம்பிடித்த முதல் மனைவி இருக்க இரண்டாவது திருமணம் செய்த சக்திவேலும் அவரது உறவினர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுனர்.