ஒக்கி புயலில் மாயமான 27 மீனவர்கள் கரை திரும்பினர்
ஒக்கி புயல் தாக்கியபோது கடலில் சிக்கி மாயமான மீனவர்கள் 27 பேர் இன்று கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் வந்தடைந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூரைச் சேர்ந்த 8 மீனவர்கள் உள்பட அசாம், கேரளா, ராமேஸ்வரம், தூத்துக்குடி, நாகையைச் சேர்ந்த 27 பேர் இரண்டு விசைப்படகுகளில் குஜராத் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது ஒக்கி புயல் தாக்கியது. இதனால் இவர்களது படகு மகாராஷ்டிரா, கோவா கடல் பகுதிகளுக்கு திசை மாறிச் சென்றது. தொலைதொடர்பும் இல்லாத நிலையில் பல நாட்கள் கடலிலேயே தத்தளித்த மீனவர்கள், இன்று கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டினம் துறைமுகம் வந்தடைந்தனர். அவர்களை உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர்.