Skip to main content

மதுரை விமான நிலையத்திற்கு இம்மானுவேல்சேகரன் பெயர் சூட்ட கோரி வி.சி.க. உண்ணாவிரதம்

Published on 13/01/2018 | Edited on 13/01/2018
மதுரை விமான நிலையத்திற்கு 
இம்மானுவேல்சேகரன் பெயர் சூட்ட கோரி வி.சி.க. உண்ணாவிரதம்               



மதுரை விமான நிலையத்திற்கு நீண்ட நாள் கோரிக்கையான இம்மானுவேல் சேகரன் பெயர் வைக்க கோரி விடுதலைச் சிறுத்தைகள்  கட்சி தெற்கு மாவட்டம் சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்றது. 

மதுரை விமான நிலையத்திற்கு இடம் கொடுத்த சின்ன உடைப்பு ,பெருங்குடி கிராம மக்கள்  தங்களது நீண்ட நாள் கோரிக்கையான இம்மானுவேல் சேகரன் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு சூட்ட கோரியும், பெருங்குடி விமான நிலைய சாலைக்கு அம்பேத்கர் சாலை பெயர் சூட்டவும், விமான நிலைய விரிவாக்கத்திற்கு இடமளித்த சின்ன உடைப்பு கிராம மக்களின் குடும்பத்தினருக்கு ஒருவருக்கு அரசு வேலை அளிக்க கோறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவனியாபுரம் பேருந்து நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தெற்கு மாவட்டம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.  இதில் தெற்கு மாவட்டச் செயலாளர் இன்குலாப் தலைமை வகித்தார். ஒன்றிய செயலர் பாலா வரவேற்றார். உண்ணாவிரத்தை எவிடன்ஸ் இயக்குநர் கதிர் துவக்கி வைத்தார்.  விழாவில் அமைப்பு செயலர் எல்லாளன், துணை   பொதுச் செயலர் கனிய அமுதன், பாராளுமன்ற செயலர் பாண்டியம்மாள்  உள்ளிட்ட நிர்வாகிகள் உள்பட 80க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



சார்ந்த செய்திகள்