Published on 05/11/2019 | Edited on 05/11/2019

இன்னும் 15 நாட்களில் உள்ளாட்சித் தேர்தல் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என துணை முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதை தொடர்ந்து அதற்கு நன்றி சொல்லும் கூட்டமானது இன்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் ஓபிஎஸ், நாங்குநேரி தொகுதி மக்களுக்கு பல நல்ல திட்டங்களை செயல்படுத்த உள்ளோம். இன்னும் 15 நாட்களில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் எனக் கூறினார்.