தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை மாநில அரசும், மாநில தேர்தல் ஆணையமும் துரித கதியில் செய்து வருகிறது. முதற்கட்டமாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு செய்யப்பட்ட நிலையில், தமிழகம் முழுவதும் மாநகராட்சிகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் போட்டியிடும் வார்டுகள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உள்ளிட்ட 11 மாநகராட்சிகள் இந்த முறை பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 10 மாநகராட்சிகள் ஆண்டுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான பணிகள் அனைத்தும் நிறைவடையும் நிலையில் இருப்பதால் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே இன்று மாநில தேர்தல் ஆணையத்தில் அனைத்து கட்சிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் தலைமை தேர்தல் அதிகாரி பழனிக்குமார் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில் திமுக, அதிமுக, தேமுதிக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளார்கள். இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.