Skip to main content

எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு: சபாநாயகர், கொறடா பதில் மனு

Published on 04/10/2017 | Edited on 04/10/2017
எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு: சபாநாயகர், கொறடா பதில் மனு

டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் சபாநாயகர், சட்டசபை செயலர், கவர்னர் செயலர் தரப்பில், பதில் மனுக்கள் இன்றுக்குள் (04.0.2017) தாக்கல் செய்யப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. நீதிபதி துரைசாமி விசாரித்த வழக்குகள், தற்போது, நீதிபதி ரவிச்சந்திரபாபுவுக்கு மாற்றப்பட்டுள்ளன. 

சபாநாயகர் தனபாலும் 500 பக்கங்கங்கள் கொண்ட பதில் மனுவை அளித்துள்ளார். சபாநாயகர் சார்பில் அவரது வழக்கறிஞர் அரிமா சுந்தரம், 500 பக்கங்கள் அடங்கிய பதில் மனுவை தாக்கல் செய்துள்ளார். இதில், விதிகளுக்கு உட்பட்டே எம்.எல்.ஏ.,க்கள் 18 பேரும் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதே போன்று அதிமுக கொறடா ராஜேந்திரன் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இதில், சட்ட விதிகளின்படியே 18 எம்.எல்.ஏ.,க்களையும் தகுதிநீக்கம் செய்ய பரிந்துரை செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணைக்காக சட்டசபை அதிகாரிகள் பலரும் நேரில் ஆஜராகி உள்ளனர்.

சார்ந்த செய்திகள்