குமாி மாவட்ட மீனவ கிராமத்தைச் சோ்ந்த மீனவா்கள் சுமாா் 700 போ் ஈரான் நாட்டில் மீன் பிடி தொழிலுக்குச் சென்றனா். தற்போது உலகையே மிரட்டும் கரேனா வைரஸ் ஈரான் நாட்டிலும் வேகமாகப் பரவி வருகிறது. இதனால் அங்கும் தொழில் முடங்கியிருப்பதோடு வா்த்தக நிறுவனங்களும் கடைகளும் அடைக்கபட்டுள்ளன. சாப்பிட உணவு கிடைக்காமல் கஷ்டப்படுகிறாா்கள்.
மேலும் அந்த மீனவா்களை கரோனா வைரஸ் தாக்கக் கூடும் என்று அவா்கள் அஞ்சுகிறாா்கள். இதனால் அந்த மீனவா்களை சொந்த ஊருக்கு அழைத்து வருவதற்கு அந்த மீனவா்களின் உறவினா்கள் கடந்த 2-ம் தேதி குமாி மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து முறையிட்டனா். மேலும் 12-ம் தேதி அதிமுக எம்பிக்களும், நேற்று 19-ம் தேதி திமுக எம்பி க்களும் மத்திய வெளியுறவுத்துறை மந்திாி ஜெய்சங்கரை சந்தித்தும் முறையிட்டனா். ஆனால் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழக அரசும் மத்திய அரசை நோிடையாக வலியுறுத்தி மீனவா்களை நோய் தாக்குவதற்கு முன் தாய்நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால் அந்த மீனவா்களின் குடும்பங்கள் கவலையும் கண்ணீருமாகவும் உள்ளன. இதனால் மத்திய, மாநில அரசைக் கண்டித்து மீனவ மக்கள் பொியளவில் கூடி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில் கரோனா வைரஸால் அதைத் தவிா்த்து இன்று குமாி மாவட்டத்தில் உள்ள 43 மீனவ கிராமங்களில் வீடுகளில் கருப்புக் கொடி கட்டி எதிா்ப்பை தொிவித்தனா்.
மேலும் தொடா்ந்து வரும் நாட்களில் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்வதை தவிா்த்து வேலை நிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபட போவதாகக் கூறியுள்ளார்கள்.