
கோவையில் கோயிலைச் சேதப்படுத்தியவர் தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவையில் மூன்று கோயில்கள் முன்பு டயர்களில் தீ வைத்து வேல்களைச் சேதப்படுத்திய சம்பவத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவை டவுன்ஹால் பகுதியில் மூன்று கோவில்களைச் சேதப்படுத்திய சம்பவத்தில் கஜேந்திரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக இருந்த சேலத்தைச் சேர்ந்த கஜேந்திரனை ஆர்.ஜி.புதூர் பகுதியில் கைது செய்துள்ளது தனிப்படை. இந்தச் சம்பவம் தொடர்பாக சி.சி.டி.வி. காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு தனிப்படை போலீசார் ஆய்வு செய்ததில் கஜேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குடும்பப் பிரச்சினையால் மன உளைச்சலில் இருந்த கஜேந்திரன் இந்தச் செயலில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. கைதான கஜேந்திரன் எந்த ஒரு அமைப்பையோ அல்லது கட்சியையோ சாராதவர் என்றும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.