Skip to main content

கூலமேடு ஜல்லிக்கட்டு ஜன. 28ம் தேதிக்கு தள்ளிவைப்பு

Published on 15/01/2023 | Edited on 15/01/2023

 

nn

 

பிரசித்தி பெற்ற ஆத்தூர் கூலமேடு ஜல்லிக்கட்டு விழா, திடீரென்று ஜன. 28ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

 

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கூலமேடு பகுதியில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. சேலம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்த காளைகள் ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்கும்.

 

பிரசித்தி பெற்ற கூலமேடு ஜல்லிக்கட்டு போட்டி ஜன. 18ம் தேதி நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து வாடிவாசல் அமைப்பதற்கான பூஜைகள் போடப்பட்டு பணிகள் நடந்து வந்தன.

 

இந்நிலையில் ஆத்தூர் கோட்டாட்சியர் சரண்யா தலைமையில் கூலமேடு ஜல்லிக்கட்டு விழா நடத்தப்படுவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. மிகக்குறுகிய காலத்தில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதில் சிக்கல் ஏற்படும் என்பதோடு, நிர்வாக காரணங்களுக்காக வேறு ஒரு நாளில் விழா நடத்த விழாக்குழுவினருக்கு ஆலோசனை வழங்கினார்.

 

இதையடுத்து, கூலமேடு ஜல்லிக்கட்டு விழா ஜன. 28ம் தேதிக்கு தள்ளி வைத்து விழாக்குழுவினர் தீர்மானித்துள்ளனர். கோட்டாட்சியர் தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கோட்டாட்சியர், வருவாய்த்துறை அலுவலர்கள், காவல்துறையினர் மற்றும் ஜல்லிக்கட்டு விழாக்குழுவினர் கலந்து கொண்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்