Published on 30/09/2021 | Edited on 30/09/2021
நெல்லை மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மூன்றாவது மற்றும் நான்காவது அணு உலைகளின் அணுக்கழிவுகளைக் கூடங்குளத்திலேயே சேமித்து வைக்க இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு அணுசக்திக்கு எதிரான போராட்டக் குழு, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கூறுகையில், "அணுக்கழிவுகளைக் கூடங்குளத்திலேயே வைப்பது மிகப்பெரிய ஆபத்தாக அமையும். கூடங்குளத்திலேயே அணுக்கழிவு மையம் அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கக் கூடாது. முதல் இரண்டு அணு உலைகளின் கழிவுகளை எங்கே வைப்பது என்பதே இன்னும் முடிவாகவில்லை" எனத் தெரிவித்தனர்.