தேசிய கொடியை ஏற்றி வைத்து நினைவு பரிசுகளை வழங்கிய ஆட்சியர் சுந்தரவல்லி
திருவள்ளுர் மாவட்ட ஆட்சித் தலைவர் சுந்தரவல்லி தேசிய கொடியை ஏற்றி வைத்து நினைவு பரிசுகளையும், பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார்
திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் இன்று (15.08.17) நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் சுந்தரவல்லி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி, வண்ண பலூன்களையும், வெண்புறாக்களை பறக்க விட்டு, காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு, சுதந்திர போராட்ட தியாகிளை கெளரவிக்கும் வகையில் சால்வை அணிவித்து, பரிசுகளையும், பாராட்டு சான்றிதழ்களையும், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி, அரசின் பல்வேறு துறைகளின் வாயிலாக 320 பயனாளிகளுக்கு ரூபாய்.26 லட்சத்து 3 ஆயிரத்து 45 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
-தேவேந்திரன்