தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி இரண்டு சீசன்களை கடந்து தற்போது மூன்றாவது சீசன் நடைபெற்று கொண்டிருக்கிறது. இரண்டு சீசன்களை போலவே மூன்றாவது சீசனும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பிக் பாஸ் சீசன் 3ல் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்ஷி, அபிராமி, மதுமிதா மற்றும் கஸ்தூரி இதுவரை போட்டியிலிருந்து வெளியேறியுள்ளனர். இதில் வனிதா மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார்.
![kavin](http://image.nakkheeran.in/cdn/farfuture/y0jxoZvR-QEXCCnxf8MqPg7UbLSKCvIihhn2UZ2C6Sw/1567165402/sites/default/files/inline-images/940.jpg)
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் கவினின் தாயார் உள்பட குடும்பத்தார் ஒரு வழக்கில் தண்டனை பெற்றது பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டது. இதனையடுத்து பிக் பாஸ் சீசன் ஒன்றில் பங்குபெற்ற காயத்ரி ரகுராம் கவினுக்கு ஆதரவாக சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்து இருந்தார். அதில் கவினின் தனிப்பட்ட வாழ்க்கையை யாரும் பெரிது படுத்த வேண்டாம் என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து இந்தத் தகவலை அறிந்த கவின் பெரும் அதிர்ச்சியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி தாயாரை பார்க்க செல்ல இருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன. இது குறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் யாரும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.