திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தென்னிந்தியாவில் புகழ்பெற்றது. கார்த்திகை தீபத்திருவிழாவும் இங்கு புகழ்பெற்றது. தீபத்திருவிழாவின் மிக மிக முக்கிய விழா என்பது பரணி தீபமும், மகாதீபமும் தான். பரணி தீபத்தை விட மகாதீபத்துக்கு பக்தர்கள் அதிக முக்கியத்துவம் தருவர். கோயிலுக்குள் இருந்து இடநெருக்கடியால் சிலாயிரம் பக்தர்கள் மட்டும்மே மகாதீபம் ஏற்றுவதையும், ஆண்டுக்கு ஒருமுறை மட்டும்மே வெளியே வந்து தரிசனம் தரும் அர்த்தநாரீஸ்வரரையும் காண முடியும் என்பது நிலை.
கோயிலுக்குள் சென்று மகாதீபத்தை காணவேண்டும் என லட்சகணக்கான பக்தர்கள் விரும்புகின்றனர். இவர்களால் பொது தரிசன வழியில் செல்ல முடியாது. காரணம் பத்தாயிரம் பேர் வரிசையில் நின்றால் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரை மட்டும்மே பக்தர்கள் மட்டும்மே அனுமதிக்கப்படுவர்கள். இதனால் உபயதாரர்கள் பாஸ் கிடைத்தால் ஓரளவு சுலபமாக கோயிலுக்குள் சென்று தரிசிக்க முடியும் என்கிற நிலைமை. இதனை பயன்படுத்திக்கொள்ளும் கோயில் பணியாளர்கள் மற்றும் புரோக்கர்கள் அந்த பாஸ்களை எடுத்து வெளியே 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரை விற்பனை செய்தனர்.
கடந்தாண்டின் பொது தரிசன வரிசையில் நின்றுயிருந்தவர்களிடம், பிளாக்கில் சினிமா டிக்கட் விற்பதை போல 1000 ரூபாய் என விற்பனை செய்தனர். இந்தாண்டு மகாதீபம் பாஸ் 3 ஆயிரம் ரூபாய் எனவும், பரணி தீபம் பாஸ் 2 ஆயிரம் ரூபாய் என புரோக்கர்கள் விற்பனை செய்தனர். உள்ளுர் மக்களே உள்ளே சென்று தரிசனம் செய்ய முடியாத நிலை நிகழும் போது, வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் சர்வ சாதாரணமாக உபயதாரர் பாஸ், முக்கிய பிரமுகர்கள் பாஸ்களை வைத்துக்கொண்டு கோயிலுக்குள் உலாவந்தனர்.