திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்தின் முக்கிய நிகழ்வாக மகாதீபம் டிசம்பர் 10ந்தேதி மாலை 6 மணிக்கு ஏற்றப்பட்டது. மகாதீபத்தை முன்னிட்டு 2500 பக்தர்களுக்கு மலையேர அனுமதி வழங்கப்பட்டது.

மலையேறும் பக்தர்கள் தாங்கள் கொண்டு செல்லும் பிளாஸ்டிக் பைகள், வாட்டர் பாட்டில்களை காலியானதும் மலை மீது போடாமல் கீழே கொண்டு வந்து விட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அதேபோல், மலை மீது எங்கும் கற்பூரம், அகல் விளக்கு போன்றவற்றை ஏற்றக்கூடாது என உத்தரவிட்டுள்ள வனத்துறையும், காவல்துறையும் மலையேறும் 2500 பக்தர்களை பரிசோதனை செய்தபின்பே அவர்களை மேலே அனுப்பினர்.
மலை உச்சிக்கு சென்று அண்ணாமலையார் பாதத்தை தரிசித்த பின்பு உடனே கீழே இறங்கிவிட வேண்டும் எனவும் கூறப்பட்டது. இதற்காக 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் 100க்கும் அதிகமான கமாண்டோ படையினர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். முதல் முறையாக மலை உச்சியில் இருந்து தொலைக்காட்சி ஒன்று நேரலை செய்ய முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.