Skip to main content

கமுதி அருகே கோபுர கலசம் திருட்டு

Published on 05/10/2017 | Edited on 05/10/2017
கமுதி அருகே கோபுர கலசம் திருட்டு

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே எம்.புதுக்குளத்தில் முனீஸ்வரர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் திருப்பணிகள் செய்து கடந்த மாதம் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கோபுரத்தில் ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பில் மூன்று ஐம்பொன் கலசங்கள் வைக்கப்பட்டன. சில நாட்களுக்கு முன் இப்பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. கோபுரக் கலசம் மீது மின்னல் தாக்கினால் விலை உயர்ந்த பொருளாக கருதப்படும் இரிடியம் கிடைக்கும் என்று மர்ம நபர்கள் நம்பியுள்ளனர். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு இந்தக் கோயில் கோபுரத்தை சேதப்படுத்திய மர்ம நபர்கள் அதில் இருந்த 3 கலசங்களை திருடிச் சென்றுவிட்டனர். 

சார்ந்த செய்திகள்