கடலூர் மாவட்டம் சிதம்பரம் பத்திரிக்கையாளர் சங்க கூட்டம் தெற்குவிதியில் நடைபெற்றது. மூத்தபத்திரிக்கையாளர்கள் ரவி, சுந்தர்ராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
கூட்டத்தில் பத்திரிக்கையாளர்கள் தினசூரியன் மகேந்திரன்,பாலிமர் தொலைகாட்சி செல்வகணபதி, தினத்தந்தி குமாரராஜா, தினகரன் திருஞானசெல்வம், தினமலர்(திருச்சி) ரவி, தினமலர் ஆறுமுகம், நியூஸ் 7 துரை, சன்டிவி செந்தில், மாலைமுரசு ராஜி, நம்தினமதி வீரமணி, தினகரன் புகைபட செய்தியாளர் பழனி, தினமலர் புகைபட செய்தியாளர் கருணாகரன், ராஜ்டிவி ராஜா, புதிய தலைமுறை பாலா, நக்கீரன் காளிதாஸ், மக்கள்குரல் குணசேகர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பத்திரிக்கையாளர்கள் மீது தொடர்ந்து பொய் வழக்கு போடும் தமிழக அரசின் நடவடிக்கைகள் குறித்து கண்டனம் தெரிவித்து பேசினார்கள்.
ஜனநாயகத்திற்கும்,பத்திரிக்கை கருத்து சுதந்திரத்திற்கும் எதிராக மூத்த பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் மீது பொய்வழக்கு போட்டு கைது செய்தமைக்கு வன்மையாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
பத்தரிக்கையாளர்களின் நலனை காக்கும்வகையில் நீதிமன்றத்தில் ஆஜராகி பத்திரிகையாளர்களின் வாதத்தை வைத்து வழக்கின் வெற்றிக்கு காரணமான மூத்தபத்திரிக்கையாளர் ஹிந்து என்.ராம்க்கு நன்றி தெரிவிப்பது. பத்திரிக்கையாளர்களுக்கு எதிரான சட்ட போராட்டத்திற்கு நல்லதீர்ப்பு வழங்கிய நீதியரசர் கோபிநாத் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பது.
பத்திரிக்கையாளர்களுக்கு பிரச்சனை என்றவுடன் குரல்கொடுத்து போராடிய அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் நன்றி. எதிர் காலத்தில் பத்திரிக்கையாளர் மீது பொய் வழக்கு போடுவதை அரசு நிறுத்தி கொள்ளவேண்டும. இல்லையென்றால் பத்திரிக்கையாளர்கள் ஒற்றுமையுடன் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.