நடிகர் ஜெய் குடிபோதையில் அதிவேமகமாக காரை ஓட்டி விபத்து - ஓட்டுநர் உரிமம் ரத்து?
சென்னை அடையாறில் இன்று அதிகாலை நடிகர் ஜெய், பிரேம்ஜி சென்ற சொகுசு கார் அடையாறு மேம்பாலத்தில் மோதி விபத்துகுள்ளானது. இதில் காரை ஓட்டி வந்த நடிகர் ஜெய் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து விபத்துக்குள்ளான சொகுசு காரை போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் குடிபோதையில் கார் ஓட்டியதாக நடிகர் ஜெய் மீது 3 பிரிவுகளில் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறிது நேரத்தில் சொந்த ஜாமீனில் விடுவித்தனர். இந்நிலையில் நடிகர் ஜெய்யின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய போக்குவரத்து அதிகாரிக்கு சென்னை போக்குவரத்து போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.