ஜெ. மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் தீபக் ஆஜர்!
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் முன்பு ஜெ., அண்ணன் மகன் தீபக் ஆஜரானார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக தொடர்ந்து சந்தேகங்களும் சர்ச்சைகளும் எழுந்ததையடுத்து, அதுபற்றி விசாரித்து அறிக்கை அளிப்பதற்காக, சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
சேப்பாக்கத்தில் உள்ள கலசமகாலில் செயல்பட்டு வரும் அந்த ஆணையம் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தவர்கள், மரணம் தொடர்பாக சந்தேகம் எழுப்பி மனு அளித்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது. அந்த வகையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, நேற்று விசாரணை ஆணையத்தில் ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை அளித்தார்.
அதைந்தொடர்ந்து இன்று ஜெ., அண்ணன் மகன் தீபக் ஆஜராகி விளக்கமளித்து வருகிறார்.
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் முன்பு ஜெ., அண்ணன் மகன் தீபக் ஆஜரானார்.
சேப்பாக்கத்தில் உள்ள கலசமகாலில் செயல்பட்டு வரும் அந்த ஆணையம் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தவர்கள், மரணம் தொடர்பாக சந்தேகம் எழுப்பி மனு அளித்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது. அந்த வகையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, நேற்று விசாரணை ஆணையத்தில் ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை அளித்தார்.
அதைந்தொடர்ந்து இன்று ஜெ., அண்ணன் மகன் தீபக் ஆஜராகி விளக்கமளித்து வருகிறார்.
படங்கள்: எஸ்.பி. சுந்தர்