ஜெ., மரணத்தை சந்தேக மரணமாக வழக்குப் பதிவு செய்யக் கோரிய மனு தள்ளுபடி!
ஜெயலலிதா மரணம் தொடர்பாக சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட மனுவைச் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதால் சந்தேகத்திற்குரிய மரணம் என வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன் விசாரணைக்கு வந்தது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஏற்கெனவே விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், நீதிமன்ற நேரத்தை மனுதாரர் வீணடித்தற்கு ஏன் அபராதம் விதிக்க கூடாது என கேள்வி எழுப்பினார். இதையடுத்து, மனுவை திரும்ப பெறுவதாக வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார். பின்னர் மனுவை தள்ளுபடி செய்ததோடு, விசாரணை ஆணையத்தை அணுகுமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.