Skip to main content

"நீங்க பிச்சையா போட்டது இன்னிக்கு வளர்ந்து மலையா நிக்குது” - சீமான் கட்சி மேடையில் கொதித்த பிரசாந்த்

Published on 27/03/2019 | Edited on 27/03/2019

நாம் தமிழர் வடசென்னை வேட்பாளர் காளியம்மாள், மீனவ சமுதாயத்தை சேர்ந்தவர். மீனவ பெண் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு எதிராக தொடர்ந்து 5 வருடங்களுக்கு மேலாக குரல் கொடுத்து வருபவர். அது மட்டுமில்லாமல் இவர் ஒரு பி.காம் பட்டதாரி ஆவார். இத்தகைய எளிமையான பின்னணியை கொண்ட ஒரு பெண் வேட்பாளரை நிறுத்தியதன் மூல நாம் தமிழர் கட்சிக்கு நற்பெயர் பெற்றிருக்கிறது. 
 

its prashanth

 

இந்நிலையில், இந்த வேட்பாளரை ஆதரித்து திடீரென மேடையேறினார் பிரபல யூ-ட்யூப் ரிவியூவர் இட்ஸ் பிரசாந்த். அவர் பேசுகையில், “ மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை ஆகிய தொகுதிகள் முக்கியமான தொகுதிகள். அந்த தொகுதிகள் எந்த மாதிரியான வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் என்று பார்க்கும்போது தொகுதிக்கும் வேட்பாளருக்கும் சம்மந்தமே இல்லாமல் இருந்தனர். இப்போது வடசென்னை என்று எடுத்துகொண்டால் மினிமம் உப்பு காற்று எப்படி இருக்கும், கப்பல் எப்படி இருக்கும், நண்டு எப்படி இருக்கும், இறால் எப்படி இருக்கும் என்றாவது தெரிய வேண்டும். ஆனால், சில வேட்பாளர்களை பார்க்கும்போது அவர்களெல்லாம் லண்டனில் வாழ்ந்தார்களா? சுவிட்சர்லாந்தில் வாழ்ந்தார்களா என்று தெரியவில்லை. நான்தான் வடசென்னை வேட்பாளர் என்று அவர்களெல்லாம் சொல்லிக்கொண்டு, எங்களுக்கு ஓட்டு போடுங்கள் என்று சொல்கிறார்கள். அவர்களுக்கு ஓட்டு போட்டால் நம்மை கண்டிப்பாக போடுவார்கள். அந்த பிளானோடுதான் வந்திருக்கிறார்கள். இப்படி பல வேட்பாளர்கள் இருக்கையில் பக்கத்து வீட்டு பெண்ணை போல சேலை கட்டிக்கொண்டு நாம் தமிழர் கட்சியின் வடசென்னை வேட்பாளர் இருந்தார். அவரிடம் ஒரு நேர்காணலில் மீனவர்களுக்கு முக்கிய பிரச்சனை என்ன என்று கேட்டபோது. நான் மீனவக்குடியை சேர்ந்தவள், அனைவரும் பிழைப்புக்கு கடலுக்குள் போய்விட்டு திரும்பி வரும்போது சொந்தமாக அவர்களுக்கு என வீடு இல்லை. அப்படி அரசாங்கத்தால் கொடுக்கப்படும் வீடுகள் மிக தொலைவில் இருக்கிறது. இதனால் அவர்களுக்கு வேலைக்கு செல்ல மிகவும் கஷ்டமான ஒன்றாக இருக்கிறது என்று அந்த வேட்பாளர் சொன்னார். அப்போதுதான் ஒன்று தெரிந்தது நாம் தமிழர் மேடையில் விஷயம் தெரியாமல் பேசினால் வைத்து செய்துவிடுவார்கள் என்று. நல்ல அறிவார்ந்த ஒரு கட்சியாக இது இருக்கிறது. 
 

இப்போது போலீஸ்காரர்களை கூட பயமில்லாமல் பேசிவிடுகிறோம். ஆனால், அரசியல்வாதியை பார்த்து நேராக கேட்க பயப்படுகிறோம். ஐம்பது வருடம் நீங்கள் பிச்சையாய் போட்டது, அவர்களிடம் மலையாய் வளர்ந்து நிற்கிறது. அவ்வளவு திருடி வைத்திருக்கிறார்கள். அவர்கள் அப்படி இருக்க ஆயுதத்தை கொடுத்தது நீங்கள் எல்லாம்தான். அப்படி அவர்களிடமே அந்த ஆயுதத்தை கொடுத்துவிட்டு அந்த மலையை உடைக்க சிரமப்பட்டுக்கொண்டு இருக்கிறோம். இந்த மாதிரி கட்சிகளும், வேட்பாளர்களும் இல்லையென்றால் உடைப்பதற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விடும். நூறு வருடம் இப்படியே இருந்து குட்டிச்சுவராகிவிடும். இறுதியில் வடசென்னை என்ற இடத்தில் சீனாக்காரன் ஒருவன் கேட் போட்டு உட்கார்ந்துகொண்டு நாம் உள்ளே போவதற்கு அவனிடம் அனுமதி வாங்கவேண்டிய சூழ்நிலை வந்துவிடும்.
 

கடல்கரைக்கு அருகே இருப்பவர்கள் எல்லாம் ஒடுக்கப்பட்டவர்கள் கிடையாது, தனித்துவிடப்பட்டவர்கள் கிடையாது இந்த மண்ணின் மைந்தன் பூர்வக்குடி அவர்கள்தான். நான்தான் கோயம்பத்தூரிலிருந்து வந்து உங்களை பற்றி பேசிக்கொண்டிருக்கிறேன். எனக்கு அந்த தகுதியே இல்லை. நூறு, நூற்றைம்பது வருடங்களாக கடலில் மீன் பிடித்து உழைத்தே இருந்ததனால் அவர்களுக்கு இரண்டு ஏக்கர் நிலத்தை வாங்கவேண்டும் என்று தெரியவில்லை பாவம், அதனால் இந்த சமூகம் அவர்களை ஒதுக்கி ஓரம்கட்டிவிட்டது. அதை மாற்ற காளியம்மாள் மாதிரியானவர்கள்தான் முதல் வித்தாக இருப்பார்கள்” என்று கூறினார். 


 

 

சார்ந்த செய்திகள்