குழந்தையின்மை,ஆண்மை குறைவு,பெண்கள் பிரச்சனை:
கிராம மக்களை குறிவைக்கும் போலி மருத்துவர்
சமீப காலமாக ஆன்லைன் திருட்டு,ஏ.டி.எம் கார்டு திருட்டு,பைக்,கார் திருட்டு போன்ற பல்வேறு திருட்டுகளுக்கு மத்தியில் குழந்தையின்மை,ஆண்மை குறைவு,பெண்கள் பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை சரிசெய்வதாக கூறி திருவண்ணாமலை டாக்டர் என்று இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள கிராமங்களில் அறிமுகம் செய்து குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தையில்லா தம்பதியினரிடம் உங்கள் பிரச்சனையை எளிய முறையில் சரிசெய்யலாம என்று கூறி பல்வேறு கிராம மக்களிடம் பல்லாயிரம் ரூபாய்களை கறந்துள்ளனர்.
இதுபற்றி இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள பாரதிநகரை சேர்ந்த ஜெயா என்பவர் தன்னுடைய அண்ணன் மனைவிக்கு நீண்ட நாட்களாக குழந்தையில்லை,என்னுடைய அம்மா டாக்டர் என்று சொல்லிக்கொண்டு வந்தவரிடம் 18000 ரூபாய் மூன்று மாதங்களுக்கு முன்பாக கொடுத்துள்ளார். பணத்தை பெற்று கொண்டவர்கள் உங்களுக்கு மருந்துகள் அனுப்புகிறோம் என்றுகூறி கடந்த மூன்று மாதங்களாகியும் இதுவரை அனுப்பவில்லை. இதுபற்றி அவர்களிடம் போன் செய்தபோது நான் ஹைதராபாத்திலிருக்குறேன்,இலங்கையிலிருக்கிறேன்,
மலேசியாவிலிருக்கிறேன் என்று கூறுகிறாரே தவிர வேற எதுவும் செய்யவில்லை. இதேபோல் இங்குள்ள ஏராளமான கிராம மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
நாமும் டாக்டர் கொடுத்த மூன்று நம்பருக்கு போன் செய்த போது இந்த 9578335147 என்ற நம்பரில் எடுத்தவர்.நீங்கள் டாக்டர் மனோகரனா என்று கேட்ட போது அப்படியாரும் இல்லை என்று போனை துண்டித்துவிட்டார். அலுவலகம் எண்கள் என்று இரண்டு ( 9360458909,9943590959 )நம்பர்களும் தொடர்பு கொள்ளமுடியாத நிலையில் உள்ளது.
கிராம மக்களை ஏமாற்றும் இதுபோன்ற போலி மருத்துவர் மீது அரசு நடவடிக்கை எடுக்குமா?
- பாலாஜி