திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்புப் பகுதியில் வசிக்கும் தம்பதி, பாலாஜி- சுமித்ரா. இந்த தம்பதியின் இரண்டு வயது மகள் சாய் ஶ்ரீயா. இந்தச் சிறுமிக்கு விளையாடுவதிலும் படிப்பின் மீதும் நாட்டம் அதிகம் இருந்துள்ளது. குழந்தையின் நாட்டத்தைப் புரிந்துகொண்ட பெற்றோர் கரோனா கால கட்டத்தில் குழந்தைக்குப் பழங்கள், விலங்குகள், பொருட்கள், உறவு முறைகள் குறித்து கற்றுக் கொடுத்துள்ளனர்.
இதில் தற்போது திருக்குறள், பழங்களின் பெயர்கள், வன விலங்குகளின் பெயர்கள், வாகனங்களின் பெயர்கள் உள்ளிட்டவற்றை சொல்லி அசத்தியுள்ளார், இந்த 2 வயது சிறுமி. இதையடுத்து, மழலை மாறாத குழந்தையின் திறமையைக் கண்டு 'இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' பெண் குழந்தைக்குப் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயத்தையும் வழங்கியுள்ளனர். பலருக்கும் முன்மாதிரியாக இருக்கிறாள் ஶ்ரீயா.