சுதந்திரம் பெற்ற இந்தியா தற்போது, அமெரிக்காவுடன் இணக்கமாக செயல்படுகிறது: ஜி.ராமகிருஷ்ணன்
உயிரை தியாகம் செய்து சுதந்திரம் பெற்ற இந்தியா தற்போது, அமெரிக்காவுடன் இணக்கமாக செயல்படுகிறது என ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதில் விடுதலை போராட்ட வீரரும், மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான சங்கரய்யா தேசிய கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய, ஜி.ராமகிருஷ்ணன் இந்திய மக்கள் பலருடை உயிரை தியாகம் செய்து சுதந்திரம் பெற்ற இந்தியா தற்போது, அமெரிக்காவுடன் இணக்கமாக செயல்படுகிறது. மேலும் நாட்டில் உள்ள பல மத மொழிகளை அழித்து காவி மயமாக்கும் நிகழ்ச்சியை பா.ஜ.க அரங்கேற்றி வருகிறது என கூறியுள்ளார்.