தினகரனுக்கு ஆதரவாக வரும் எம்.எல்.ஏ.க்களின்
எண்ணிக்கை அதிகரிக்கும்:செந்தில்பாலாஜி
புதுச்சேரியில் தங்கியுள்ள தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் முதலியார்பேட்டை சன் வே ஹோட்டலிலிருந்து மீண்டும் சின்ன வீராம்பட்டினத்திலுள்ள வின்ட் ஃப்ளவர் ஹோட்டலுக்கு சென்று தங்கினர்.
அப்போது எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி கூறியதாவது:- ’’டிடிவி தினகரனுக்கு ஆதரவாக வரும் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இ.பி.எஸ்- ஓபிஎஸ் இணைப்பு மக்களுக்காக அல்ல, பதவிக்காகவே தான். பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு மட்டுமே உள்ளது’’ என தெரிவித்தார்.
- சுந்தரபாண்டியன்