Skip to main content

அமலாக்கத்துறையின் சோதனை திட்டமிட்ட நாடகம் - பா.சிதம்பரம்

Published on 13/01/2018 | Edited on 13/01/2018
அமலாக்கத்துறையின் சோதனை திட்டமிட்ட நாடகம் - பா.சிதம்பரம்



அமலாக்கத்துறையின் சோதனை திட்டமிட்டட நாடகம்; சோதனையில் ஏதும் கைப்பற்றப்படவில்லை  என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

அமலாக்கத்துறையின் நாடகத்தை ஏற்கனவே எதிர்பார்த்திருந்தேன், சென்னை உள்ளிட்ட இடங்களில் நடந்த அமலாக்கத்துறை சோதனையில் ஏதும் கைப்பற்றப்படவில்லை.  டெல்லியில் உள்ள இல்லத்தில் படுக்கை அறை மற்றும் சமையல் அறையில் சோதனை நடந்தது.

கார்த்தி சிதம்பரம் தொடர்பான வழக்கில் நேற்று உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. அமைச்சராக இருந்தபோது நாடாளுமன்றத்தில் அளித்த அறிக்கைகளை எடுத்துச் சென்றுள்ளனர்.


சார்ந்த செய்திகள்