வீரர் பிரிவால் விஷம் குடித்த நண்பர்
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே கண்டணியை சேர்ந்த ராணுவ வீரர் இளையராஜா (25) காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் வீரமரணமடைந்தார். இதே ஊரை சேர்ந்த இவரது நண்பர் மணிகண்டன் (25) டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இளையராஜாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டவுடன், அவரது பிரிவை தாங்க முடியாமல் மணிகண்டன் விஷம் குடித்தார். உடனடியாக உறவினர்கள் அவரை மீட்டு, மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.