Skip to main content

புகழ்ச்சி எனக்கு பிடிக்காது; யாரும் என்னை புகழ வேண்டாம் - ஓபிஎஸ்!

Published on 09/01/2018 | Edited on 09/01/2018
புகழ்ச்சி எனக்கு பிடிக்காது; யாரும் என்னை புகழ வேண்டாம் - ஓபிஎஸ்!



தமிழக சட்டசபை இன்று காலை கூடியதும், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் 12 பேர் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. பின்னர் ஒக்கி புயலில் சிக்கி உயிர் இழந்தவர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. எம்.எல்.ஏ.,க்கள் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

இதன் பின்னர் கலசபாக்கம் எம்.எல்.ஏ., பன்னீர்செல்வம், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை, 'ஜல்லிகட்டு நாயகன்' என்று புகழ்ந்தார். இதற்கு தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து பேசிய துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், புகழ்ச்சி எனக்கு பிடிக்காது. சட்டப்பேரவையில் யாரும் என்னை புகழ வேண்டாம் என அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு ஓபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் அனைத்து பாராட்டுகளுக்கும், புகழுக்கும் காரணம் ஜெயலலிதா மட்டுமே என அவர் கூறியுள்ளார். 

சார்ந்த செய்திகள்