கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் நடந்த கொலை சம்பவம், ஒரு குடும்பத்தின் இருளான முகத்தை வெளிக்காட்டி உள்ளது. சாலை விபத்தாகப் பதிவு செய்யப்பட்ட இந்த சம்பவம், திட்டமிட்ட கொலையாக மாறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
55 வயதான கோவிந்தசாமி என்பவர், ஊத்தங்கரையில் கடந்த மாதம் 24 ஆம் தேதி அன்று நடந்த விபத்தில் இறந்ததாக கூறப்பட்டது. ஆனால், போலீஸ் விசாரணையில் இது திட்டமிட்ட கொலை என்பது தெரியவந்துள்ளது. இந்த கொடூர செயலுக்குப் பின்னால் இருந்த காரணம் முறையற்ற தொடர்பு ஒரு முக்கிய காரணமாக இருந்தது. கோவிந்தசாமியின் மனைவி மாதேஸ்வரிக்கும் அவரது மருமகனுடன் முறையற்ற தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் பல நாட்களாக விரக்தியில் இருந்த கோவிந்தசாமி மனைவியிடம் தொடர்ந்து பிரச்சனைகள் ஈடுபட்டு வந்துள்ளார். மனைவி கணவன் சாமல்பட்டி காவல் நிலையத்தில் பலமுறை புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி உள்ளனர். இதில் கோபமடைந்த மனைவி கொலை செய்ததற்கு மகள் இருவரும் சேர்ந்து கொலை செய்ய திட்டம் தீட்டியது அம்பலமானது.
இந்தக் கொலையை நிறைவேற்ற, மனைவி மாதேஸ்வரி மற்றும் மகள் சரண்யா ஆகியோர் கூலிப்படையை நியமித்தனர். வேல்முருகன் உள்ளிட்டகுற்றவாளிகள் கோவிந்தசாமிக்கு வேலை வாங்கி தருவதாக கூறி சம்பவ நாளன்று போன் செய்து வர வைத்துள்ளனர். கொலையாளிகள் ஒன்றிணைந்து கிரிக்கெட் பேட்டால் கோவிந்தசாமியின் தலையில் அடித்து கொலை செய்து, இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்தது போல் நாடகம் செய்துள்ளனர்.
இந்த வழக்கில், மனைவி மாதேஸ்வரி, மகள் சரண்யா மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த வேல்முருகன், சிவகாசி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும், பிரசாந்த், முஷாரப் மற்றும் நந்து ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். அவர்கள் மூவரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஊத்தங்கரை காவல் ஆய்வாளர் முருகன் மற்றும் தனிப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் அவர் தலைமைலான குழுவினர் நடத்திய விசாரணையில் இந்த கொலை சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.