Skip to main content

கி.வீரமணி தலைமையில் இந்தி அழிப்பு போராட்டம்! 

Published on 29/04/2022 | Edited on 29/04/2022

 

Hindi destruction struggle led by K. Veeramani!

 

மத்திய அரசு புதிய தேசியக் கல்விக் கொள்கையை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு தமிழ்நாட்டில் பெரும் எதிர்ப்பு வலுத்துவருகிறது. குறிப்பாக புதிய தேசியக் கல்விக் கொள்கையில் இந்தி திணிப்பு இருப்பதால் அதனை பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். அதேபோல், உத்திரப் பிரதேசம் மாநிலத்தின் பாஜக அமைச்சர் சஞ்சய் நிஷாத், “நீங்கள் இந்தியாவில் வசிக்கிறீர்கள் என்றால் இந்தியை நேசிக்க வேண்டும். இல்லையெனில் நீங்கள் வெளிநாட்டவர்களாகவே கருதப்படுவர். இந்தி பேச முடியாவிட்டால் நாட்டை விட்டு வெளியேறி வேறு எங்காவது செல்லுங்கள்”  என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில், திராவிடர் கழகம் சார்பில் அதன் தலைவர் கி.வீரமணி தலைமையில் நாளை இந்தி அழிப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

இதுதொடர்பாக திராவிடர் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தேசியக் கல்வி என்ற பெயரால் ஒன்றிய அரசு திணிக்க இருக்கும் ஹிந்தியை எதிர்த்து, நாளை  (30.4.2022) பிற்பகல் 3 மணிக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில், சென்னை பெரியார் திடலிலிருந்து புறப்பட்டு, பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை வழியாக ஊர்வலமாகச் சென்று, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்