Published on 19/09/2018 | Edited on 19/09/2018
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ராமாரெட்டி தனது நிலத்திற்கு மின் இணைப்பு வழங்குமாறு மனு வழங்கி பல ஆண்டுகளாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன் மின் இணைப்பு வேண்டி விண்ணப்பிக்கப்படும் மனுக்கள்மீது உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்றும், இப்படி ஏராளமான மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகின்றன என்றும் கூறினார்.
இதுகுறித்து நீதிமன்றம் உத்தரவிட்டும் அதில் எவ்வித நடவடிக்கையும் இல்லையென்று தெரிவித்தார். ஒரு மின் இணைப்பு வழங்க தமிழ்நாடு மின்சார வாரியம் 10 ஆண்டுகள் எடுத்துக்கொள்வது ஏன் எனக் கேட்ட அவர், ஒரு நிகழ்ச்சிக்காக கோடிக்கணக்கில் செலவிடும் அரசு, விவசாயிகளுக்காக ஒரு சிறு தொகை செலவு செய்யக்கூடாதா என்றும் கேள்வி கேட்டுள்ளார்.