Skip to main content

எதிர்கட்சி தலைவருக்கு சட்டம் தெரிந்திருக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் குறித்து எச்.ராஜா விமர்சனம்!

Published on 23/06/2018 | Edited on 23/06/2018


ஒரு எதிர்கட்சி தலைவருக்கு சட்டம் தெரிந்திருக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் குறித்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா விமர்சித்துள்ளார்.

முன்னதாக, நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள சென்ற ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு கொடி காட்டினர். இதையடுத்து காவல்துறையினர் கறுப்புக்கொடி காட்டிய திமுகவினர் 300 பேரை கைது செய்தனர். அதில், 192 பேர் ரிமாண்ட் செய்யப்பட்டனர். இதற்கு உடனடியாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்தார்.

 

 

இதையடுத்து, இன்று காலை நாமக்கல்லில் திமுகவினர் 192 பேர் கைது செய்யப்பட்டதை கண்டித்து மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் ஆளுநர் மாளிகை அருகே முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போரட்டத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின், ஜெ.அன்பழகன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், சம்பவம் குறித்து தேசிய செயலாளர் எச்.ராஜா தனது ட்விட்டர் பதிவில்,

ஒரு எதிர்கட்சி தலைவருக்கு சட்டம் தெரிந்திருக்க வேண்டும். இந்திய குற்றவியல் சட்டம் பிரிவு 124 தெளிவாக கூறுகிறது ஜனாதிபதி/ஆளுனரின் மரியாதைக்கு குந்தகம் ஏற்படுத்த நினைத்தால் 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை உண்டு. நாமக்கல் காவல்துறை செயல் சட்டப்படி சரி என தெரிவித்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்